6 வயது சிறுமி கூட்டுப்பாலியல்.. ஆபாச படங்களை பார்த்து 15 வயது சிறுவன் செய்த கோரம் : அதிர்ச்சி சம்பவம்!!
Author: Udayachandran RadhaKrishnan13 February 2023, 9:49 pm
செல்போனில் ஆபாச படங்களை பார்த்து 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 15 வயது சிறுவனை கைது செய்துள்ளனர்.
மத்தியபிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டம் பட்ரோ கிராமத்தை சேர்ந்த பெண் தனது 6 வயது மகளை அழைத்துக்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை இந்து மத வழிபாட்டு தலத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு தாயும் அவரது மகளும் பிரிந்துள்ளனர். தனது மகள் வீட்டிற்கு சென்றிருப்பார் என்று எண்ணிய தாய் வழிபாட்டு தலத்தில் வழிபாடு நடத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீட்டில் தனது மகள் இல்லை என்பதை அறித்த தாய் உடனடியாக போலீசில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான 6 வயது சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர்.
அப்போது, சனிக்கிழமை காலை அந்த கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளிக்கூடத்தில் சிறுமி பிணமாக கிடப்பதை கண்டுபிடித்தனர்.
சிறுமியின் வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டிருந்தது. சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி இந்த சம்பவம் தொடர்பாக 15 வயது சிறுவனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சிறுவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், உயிரிழந்த 6 வயது சிறுமி கடைசியாக 15 வயது சிறுவனுடன் இருந்துள்ளார். அந்த சிறுவனை பிடித்து நடத்திய விசாரணையில் சிறுமியை ஆள்நடமாட்டமற்ற பகுதிக்கு அழைத்து சென்று அங்கு சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததையும், சிறுமி கத்தி கூச்சலிட்டதால் கொலை செய்ததையும் சிறுவன் ஒப்புக்கொண்டான்.
மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சிறுவன் தனது சொல்போனில் தொடர்ச்சியாக ஆபாச படம் பார்க்கும் பழக்கம் கொண்டவன் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சிறுவனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.