2 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய கார்… கதறல் சத்தத்தை கேட்டு திரண்ட மக்கள் : நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan26 July 2022, 4:51 pm
ஆந்திரா : ஏலூரூ அருகே மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இரண்டு பேருடன் அடித்து செல்லப்பட்ட காரை மீட்க தீவிர முயற்சி நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக கோதாவரி நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கோதாவரி துனை நதிகள் மற்றும் அவற்றிலிருந்து பிரியும் கால்வாய்கள் ஆகியவற்றிலும் வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் ஏலூரூ மாவட்டத்தில் உள்ள கண்ணாபுரம் அருகே ஓடும் மேற்கு கால்வாய் மீது மழை வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் அந்த வழியாக சென்ற கார் ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் இரண்டு பேருடன் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரை கயிறு கட்டி டிராக்டர் உதவியுடன் மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தகவல் அறிந்து வந்து போலீசார், தீயணைப்பு படையினர் ஆகியோர் அங்கு வந்து மீட்பு முயற்சிகளை முடித்து விட்டுள்ளனர்.