ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்.. வாலிபரை மடக்கி பிடித்த மாணவர் சங்கம்!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2024, 6:29 pm

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து மேற்குவங்க மாநிலம் ஹவுராவிற்கு செல்லும் 12864 ரயில் நேற்று இரவு 10.40 மணிக்கு ஆந்திர மாநிலம் விஜயவாடாவிற்கு வந்தது.

அப்போது விசாகப்பட்டினம் செல்ல எஸ் 6 பெட்டியில் ஏற்கனவே முன்பதிவு செய்த இருக்கை எண் 55ல் சென்று தூங்கினார். நள்ளிரவு 2 மணி அளவில் வாலிபர் ஒருவர் அந்த பெண்னின் அந்தரங்க பாகங்களை கைகளால் தொட்டு பார்த்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போடவே அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் அதே கோச்சில் பயணம் செய்த ஏ.ஐ.எஸ்.எப் மாணவர் சங்க மாநில பொருளாளர் சாய்குமார் மற்றும் சக பயானிகள் அந்த வாலிபரை பிடித்து காலை 5.30 மணிக்கு விசாகப்பட்டிணம் சென்ற போது ரயில் போலீசில் ஒப்படைத்து மாணவி மூலம் புகார் அளிக்க வைத்தனர்.

ரயில்வேயில் பயணிக்கும் போது பயணிகளின் அருகில் வந்து டிக்கெட்டுகளை சரிபார்ப்பதில் ரயில்வே ஊழியர்களின் கவனம் உள்ளதே தவீர பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முற்றிலும் காற்றில் விட்டுள்ளனர்.
பெண்களுக்கு எங்கு சென்றாலும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலையில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தாமல் இருப்பது வெட்கக்கேடானது என சாய்குமார் தெரிவித்தார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்