நியாயமான தேர்தலா? பலமுறை கூறிவிட்டோம் : கடைசி நேரத்தில் ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்!
Author: Udayachandran RadhaKrishnan3 June 2024, 7:33 pm
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நாளை (ஜூன் 4) வெளியாக உள்ள நிலையில், இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், தேர்தல் ஆணையம், நாளை வெளியாகும் தேர்தல் முடிவுகளில் நாட்டின் ஜனநாயகாத்தை நிலைநிறுத்த வேண்டும்.
தேர்தல் முடிவுகள் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக அதனை தீர்க்கும்படி தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்.
தேர்தலை நியாயமாக நடத்த பலமுறை வலியுறுத்தியும் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கையில் திருப்தியில்லை.
வாக்கு எண்ணிக்கையில், ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உச்சநீதிமன்றம் உடனடியாக தலையிட வேண்டும்.
தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் தேர்தலுக்கு முன்பு ஒன்றாக இருந்த கூட்டணியையே அழைக்க வேண்டும். புதிய அரசு பொறுப்பேற்கும் வரையில் எந்தவித பிரச்சனைகளும் ஏற்பட விடாமல் தடுப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி குடியரசு தலைவருக்கும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
0
0