சினிமா படபாணியில் என்ட்ரி… எதிர்பாராமல் அறுந்து விழுந்த கிரேன்… தனியார் நிறுவன CEO பரிதாப பலி… அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
20 January 2024, 5:06 pm

விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் ஷா, அவரது நிறுவனத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா கடந்த வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதற்காக, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் மிக பிரமாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் ஷா மற்றும் நிறுவன தலைவர் விஸ்வநாத் ராஜு தட்லா ஆகியோர் சினிமா பாணியில் என்ட்ரி கொடுக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, கிரேன் உதவியுடன் இருவரும் 20 அடி உயரத்தில் இரும்பு கூண்டில் நின்றபடி நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, கூண்டின் இரும்புச் சங்கிலி ஒருபுறம் உடைந்து விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் சஞ்சய் ஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ