வீட்டிற்குள் கேட்ட மரண ஓலம்… தீயில் எரிந்து கொண்டிருந்த குடும்பம் ; விபரீத முடிவு எடுக்க காரணம் இதுவா..?

Author: Babu Lakshmanan
12 October 2022, 9:54 pm

கேரளா – திருச்சூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீவைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

திருச்சூர் திருவில்வமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் ராதாகிருஷ்ணன் – சாந்தி தம்பதி. இவர்களுக்கு கார்த்திக், ராகுல் என 2 மகன்கள் உள்ளனர். குடும்பத்துடன் இவர்கள் வாழ்ந்து வந்த நிலையில், ராதாகிருஷ்ணனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால், கடன் பிரச்சினை அதிகரித்துள்ளது.

கடனை திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால், நான்கு பேரும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, வீட்டின் சமையலறையில் 4 பேரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டனர்.

உடலில் நெருப்பு பற்றி எரிவதை தாங்க முடியாமல் அவர்கள் அலறினர். இதனைக் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், தீயில் கருகிய 4 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 523

    0

    0