அதிகாலை நடந்த கார் விபத்தில் பிரபல நடிகர் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி!!!

Author: Udayachandran RadhaKrishnan
5 June 2023, 11:36 am

அதிகாலை நடந்த கார் விபத்தில் பிரபல நடிகர் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி!!!

இன்று அதிகாலை 4:30 மணியளவில் கயபமங்கலம் பனம்பின் என்ற இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூர் கய்பமங்கலத்தில் நடந்த கார் விபத்தில் மலையாள காமெடி நடிகர் கொல்லம் சுதி உயிரிழந்தார்.

ஒரு நிகழ்ச்சி முடிந்து வடகரையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த கார், எதிரே வந்த பிக்கப் வேன் மீது மீது மோதியது. இதில் நடிகர் சுதி, பினு அடிமாலி, உல்லாஸ் அரூர், மகேஷ் ஆகியோர் காயமடைந்தனர்.

இதில் பலத்த காயம் அடைந்த கொல்லம் சுதியை கொடுங்கல்லூர் ஏஆர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

2015ல் வெளியான கந்தாரி படத்தின் மூலம் மலையாள சினிமாவில் நுழைந்தார் கொல்லம் சுதி. கட்டப்பனாவில் ரித்திக் ரோஷன், குட்டநாடன் மார்பப்பா, தீட்டா ராப்பை, வாகத்திரிவ், உள்பட பல படங்களில் நடித்து உள்ளார். தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பார்வையாளர்களை அதிகம் சிரிக்க வைத்தவர் நடிகர் கொல்லம் சுதி.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 3289

    0

    1