சிட்டிங் எம்பியாக உள்ள பிரபல நடிகைக்கு வாய்ப்பு மறுப்பு… பாஜகவில் இணைய உள்ளதாக அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2024, 5:12 pm

சிட்டிங் எம்பியாக உள்ள பிரபல நடிகைக்கு வாய்ப்பு மறுப்பு… பாஜகவில் இணைய உள்ளதாக அறிவிப்பு!

கர்நாடகத்தில் உள்ள மாண்டியா தொகுதி எம்.பி. யாக இருப்பவர் நடிகை சுமலதா. பா.ஜ.க ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

இதனால், வரும் தேர்தலிலும் சுமலதாவுக்கு பா.ஜ.க ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாண்டியா தொகுதியை மதசார்பற்ற ஜனதா தள கட்சிக்கு ஒதுக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என நடிகை சுமலதா அறிவித்துள்ளார். அதனால், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் குமாரசாமியை ஆதரிப்பதாக மண்டியா தொகுதி மக்களவை தொகுதி உறுப்பினர் நடிகை சுமலதா இன்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நடிகை சுமலதா கூறியதாவது, சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட தன்னை வெற்றி பெற செய்த மாண்டியா மக்களை எப்போதும் மறக்கமாட்டேன். விரைவில் பா.ஜ.க.வில் இணைகிறேன், எப்போதும் போல உங்களின் ஆதரவு வேண்டும் என்று தெரிவித்தார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ