ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் கச்சேரி நடத்திய பிரபல பாடகி.. இன்று பாஜகவில் ஐக்கியம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 March 2024, 8:51 pm

ராமர் கோவில் குடமுழுக்க விழாவில் கச்சேரி நடத்திய பிரபல பாடகி.. இன்று பாஜகவில் ஐக்கியம்!!

பாஜக டெல்லி தலைமை அலுவலகத்தில் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் மற்றும் தலைமை செய்தித் தொடர்பாளர் அனில் பலுனி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில் அனுராதா பட்வால் பாஜகவில் இணைந்திருக்கிறார்.

பாஜகவில் இணைந்த பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அனுராதா, “சனாதனத்துடன் நெருங்கிய பிணைப்புடன் செயல்படும் அரசுடன் இணைகிறேன். பாஜகவின் ஓர் அங்கமாக இருப்பது தனக்கு கிடைத்த பாக்கியமாகக் கருதுவதாக தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, “அது குறித்து இன்னும் தெரியவில்லை” என்று அவர் பதிலளித்துள்ளார்.

பாடகி அனுராதாவுக்கு 2017ஆம் ஆண்டு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. கடந்த ஜனவரியில், அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில், பாடகி அனுராதா இசை நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Love for Kayadu.. he composer who shocked the film crew கயாடு மீது காதல்? படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்த இசையமைப்பாளர்.. இதெல்லாம் தேவையா?