ஆந்திர எல்லையில் தமிழக கூலித்தொழிலாளிகளை துரத்திய யானைக் கூட்டம் : தூக்கி வீசியதில் ஒருவர் பலி.. மற்றொருவர் படுகாயம்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 July 2022, 1:11 pm

ஆந்திர மாநில மலைக்கிராமம் அருகே வனப்பகுதியில் நடந்து சென்ற கூலித்தொழிலாளி யானை தாக்கி உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம். மகாராஜகடை அடுத்துள்ள ஏக்கல்நத்தம் மலைகிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 43). ஆந்திர மாநிலம் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 60).

கூலி தொழிலாளிகளான இருவரும் ஆந்திர மாநிலம் குப்பத்தில் வேலைக்கு சென்று நேற்று மாலை வீட்டிற்கு திரும்பினர். மாலை 6:30 மணியளவில் ஓ.என் கொத்துார் பஸ் ஸ்டாப்பில் இறங்கி தமிழக – ஆந்திர வனப்பகுதியை ஒட்டி 2கி.மீ., துாரம் நடந்து, அருகிலுள்ள பஸ் ஸ்டாப்புக்கு வந்துள்ளனர்.

அப்போது தமிழக வனப்பகுதியில் இருந்து, ஆந்திர வனப்பகுதிக்கு சென்ற யானைக்கூட்டம் அவர்களை தாக்கியது. படுகாயமடைந்த அவர்களின் அலறல் சப்தம் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் அளித்த தகவல்படி இருவரும் மீட்கப்பட்டு, குப்பம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கோவிந்தன் இறந்தார்.

படுகாயமடைந்த நாகராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆந்திர மாநிலம் குரிப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ