அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து கோர விபத்து : மூன்று போலீசார் உட்பட 4 பேர் பரிதாப பலி..!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2022, 2:10 pm

திருப்பதி : சித்தூர்- திருப்பதி இடையே இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் கர்நாடகாவை சேர்ந்த 3 போலீசார் உட்பட 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக போலீசார் கார் ஒன்றில் வழக்கு ஒன்று தொடர்பாக குற்றவாளியை பிடிப்பதற்கு நேற்று முன்தினம் திருப்பதி வந்திருந்தனர்.

திருப்பதிக்கு வந்திருந்த கர்நாடக போலீசாரில் இரண்டு பேர் எஸ்.ஐ மற்றும் மூன்று கான்ஸ்டபிள் இருந்தனர். அவர்கள் வந்த காரை தனியார் டிரைவர் ஒருவர் ஓட்டி வந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மீண்டும் அவர்கள் கர்நாடகா புறப்பட்டு சென்றனர். அவர்களுடைய கார் திருப்பதி-சித்தூர் இடையே உள்ள பூத்தலப்பட்டு அருகே சென்று கொண்டிருந்த போது அதிக வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகி பல்டி அடித்து நொறுங்கியது.

விபத்தில் காரில் பயணித்த கர்நாடக போலீசார் இரண்டு பேர் பேர், ஒரு எஸ்ஐ, கார் ஓட்டுநர் ஆகியோர் உடல் நசங்கி பரிதாபமாக மரணமடைந்தனர். ஒரு எஸ்ஐ,ஒரு காண்ஸ்டபில் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து பற்றிய தகவல் அறிந்த பூத்தலப்பட்டு போலீசார் விரைந்து சென்று மரணம் அடைந்தவர்களின் உடல்களை கைப்பற்றி சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

படுகாயம் அடைந்த எஸ்ஐ, கான்ஸ்டபிள் ஆகியோர் தற்போது வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • Jyothika controversy in Bollywood web series ஜோதிகா நீங்களே இப்படி பண்ணலாமா…படு கேவலம்…முகம் சுளித்த ரசிகர்கள்.!