கோலாகலமாக நடைபெற்ற திருமணம்…. விருந்து சாப்பிட்ட உறவினர்கள் : 17 பேருக்கு வாந்தி, பேதி, மயக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2022, 2:33 pm

திருமணத்தில் விருந்து சாப்பிட்டவர்களில் 17 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு.
ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் டாக்டர் அம்பேத்கர் கோணசீமா மாவட்டத்தில் உள்ள மந்த பேட்டை நகரில் நேற்று இரவு நடைபெற்ற திருமணம் ஒன்றில் விருந்து சாப்பிட்டவர்களில் 17 பேருக்கு இன்று அதிகாலை வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகிய கடுமையான பிரச்சனைகள் ஏற்பட்டன.

உடனடியாக அவர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

திருமணத்தை முன்னிட்டு நேற்று மதியத்திற்கு மேல் சமைக்கப்பட்ட உணவை அவர்கள் சாப்பிட்டது தெரிய வந்தது. எனவே உணவு கெட்டுப் போய் இருக்கலாம் என்றும் கெட்டு போன உணவை சாப்பிட்டதால் இது போன்ற பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

தற்போது 17 பேரும் மந்தப்பேட்டை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!
  • Close menu