திருப்பதி மலை அடிவாரத்தில் சுற்றிய சிறுத்தை சிக்கியது : வனத்துறை வைத்த கூண்டில் மாட்டிய காட்சி வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 December 2022, 1:16 pm

திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பல்கலைக்கழகத்திற்கு அவ்வப்போது வந்து செல்லும் வனவிலங்குகளில் மூன்று சிறுத்தைகள் இருந்து வந்தன.

இரண்டு நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் அங்கு வந்த சிறுத்தை நாய் ஒன்றை அடித்து மரத்தின் மேல் கொண்டு சென்று தின்று மீதியை விட்டு சென்றது.

எனவே சிறுத்தைகளை பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை மாணவ மாணவிகளிடமிருந்து ஏற்பட்டது. மேலும் மாணவ மாணவிகள் பல்கலைக்கழக ஹாஸ்டலை காலி செய்து அங்கிருந்து வெளியேறி விட்டனர்.

எனவே சிறுத்தை பிடிப்பதற்காக வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு அங்கு கூண்டுகளை நேற்று இரவு வைத்தனர்.

இந்த நிலையில் ஒரு சிறுத்தை நேற்று இரவு கூண்டுக்குள் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை பிடிக்க சென்று சிக்கி கொண்டது.

கூண்டில் சிக்கிய சிறுத்தையை அருகில் உள்ள வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவுக்கு அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர். இதனால் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவ,மாணவிகள், பேராசிரியர்கள் ஆகியோர் நிம்மதி அடைந்துள்ளனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!