திருப்பதி மலைப்பாதையில் உலா வந்த ஒற்றை யானை… பக்தர்கள் அச்சம்…
Author: kavin kumar7 February 2022, 10:58 pm
திருப்பதி: திருப்பதி மலையில் உள்ள 1வது மலைப்பாதை, பக்தர்கள் நடந்து செல்லும் பாதையை ஆகிவற்றின் அருகே இன்று ஒற்றை யானை ஒன்றின் நடமாட்டம் காணப்பட்டது.
திருப்பதி மலையில் இருந்து திருமலைக்கு சென்று கொண்டிருந்தவர்கள் ஒற்றை யானை பாதை ஓரத்தில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினர் விரைந்து சென்று சைரன் மூலம் ஒலி எழுப்பி ஒற்றை யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கடந்தவாரம் யானை கூட்டம் ஒன்று திருப்பதி மலை பாதை வழியாக வனப்பகுதியை கடந்து சென்றது. அந்த கூட்டத்திலிருந்து வழி தவறிய யானை ஒற்றை யானையாக திருப்பதி மலை வனப்பகுதியில் உளவுவதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் அலிபிரியில் இருந்து திருப்பதி மலைக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து செல்ல பயன்படுத்தும் நடைபாதை சமீபத்தில் ஒற்றை யானை நடமாட்டம் காணப்படுவதால் பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து மலை ஏறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.