பெண் தோழியுடன் உல்லாசமாக இருக்க 41 வயது நபர் செய்த செயல் சோகத்தில் முடிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் தனது பெண் தோழியுடன் உல்லாசமாக இருப்பதாக நாக்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்துள்ளார் 41 வயது நபர். அந்தப் பெண்ணுடன் நீண்ட நேரமும், திருப்தியாகவும் உடலுறவு வைக்க வேண்டும் என் விபரீத ஆசை அந்த நபருக்கு எழுந்துள்ளது.
இதனால், தான் வாங்கி வந்த பாலியல் உணர்வுகளை தூண்டக் கூடிய வயாகரா மாத்திரையை இரண்டை எடுத்துள்ளார். அறையில் தனியாக இருந்த தனது பெண் தோழியுடன் உல்லாசமாக இருக்க அந்த இரண்டு மாத்திரைகளையும் ஒரே நேரத்தில் போட்டுள்ளார்.
அதோடு, மதுவையும் குடித்துள்ளார். இதனால், அந்த நபருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. வாந்தி எடுத்த அவரை மருத்துவமனைக்கு செல்லுமாறு அவரது பெண் தோழி கூறியுள்ளார். ஆனால், அதனை கேட்க மறுத்த அந்த நபர், சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து பதறிப் போன அவரது பெண் தோழி, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் குறையும் போது, செரிப்ரோவாஸ்குலர் ரத்தக்கசிவு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை மீட்டு பிரே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைதத்தனர்.
நடிகை சுகன்யா புது நெல்லு புது நாத்து படம் மூலம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டார். தொடர்ந்து பல படங்களில் நடித்த…
விஜய்யின் கடைசி திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரு அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தனது…
எம்ஜிஆர்-நம்பியார் நட்பு திரைப்படங்களில் எம்ஜிஆர்க்கு நம்பியார் எப்போதும் வில்லன்தான். அதுவும் இந்த ஹீரோ வில்லன் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த படம்…
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி. இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் முரளிதரன் என்பவர்…
கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. சமையல் வேலை செய்யும் இவர், இந்து முன்னணியில் உறுப்பினராக இருந்து வருகிறார்.…
கோவிலுக்கு சென்ற இளம்பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை…
This website uses cookies.