200 பெட்டி பீர் பாட்டில்களுடன் சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்து : போட்டி போட்டு பாட்டில்களை அள்ளிய குடிமகன்கள்! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
6 June 2023, 5:04 pm

ஆந்திர மாநிலம் அனக்காப் பள்ளியில் இருந்து பீர் பாட்டில்களை ஏற்றி கொண்டு மினி லாரி ஒன்று நரசிபட்டணம் புறப்பட்டு சென்றது.

சற்று தூரம் சென்ற நிலையில் அந்த மினி லாரி திடீரென்று சாலையில் கவிழ்ந்து விழுந்தது. இதனால் அதில் ஏற்றப்பட்டிருந்த சுமார் 200 பெட்டி பீர் பாட்டில்கள் சாலையில் விழுந்து புரண்டு ஓடின.

இதனை பார்த்த குடிமக்கள் போட்டி போட்டு பீர் பாட்டில்களை அள்ளிச் சென்றனர். இது பற்றிய தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் பீர் பாட்டில்களை அள்ளிச் செல்ல முயன்ற சிலரை கட்டுப்படுத்தி அவர்களிடம் இருந்து பீர் பாட்டில்களை வாங்கி பத்திரப்படுத்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!