வாலுடன் பிறந்த அதிசய குழந்தை… மருத்துவ உலகில் அபூர்வம் : டாக்டர்கள் எடுத்த புதிய முயற்சி!

Author: Udayachandran RadhaKrishnan
17 July 2024, 10:32 am

தெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டம் பீபிநகரில் நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரசவ வலியால் வந்த பெண்ணுக்கு 8 மாதங்கள் முன்பு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்போது பெண்னுக்கு அறுவை சிகிச்சை செய்தபோது சுமார் 15 சென்டிமீட்டர் நீளமுள்ள வால் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்த மருத்துவர்கள் குழந்தையை மிகவும் சிரமப்பட்டு வெளியே எடுத்தனர்.

வாலுடன் இருக்கும் குழந்தை பிறந்தது மருத்துவமனை டாக்டர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் குழந்தைக்கு வருங்காலத்தில் சிரமம் ஏற்படும் என குடும்பத்தினருக்கு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் வாலுடன் பிறந்த குழந்தையை எய்ம்ஸ் குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர்கள் கடந்த ஜனவரி 2024 இல் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து வாலி அகற்றினர்.

6 மாதங்களுக்குப் பின் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நரம்பியல் சிக்கல்கள் எதுவும் இல்லை என்பதை டாக்டர்கள் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து எய்ம்ஸ் மருத்துவர்கள் இந்த அரிய அறுவை சிகிச்சை குறித்து தெரிவித்தனர்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தை ஐந்து நாட்கள் உள்நோயாளியாக டாக்டர்கள் கண்காணிப்பில் வைத்திருந்ததாகவும் அதன் பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

இது அசாதாரணமான வளர்ச்சி என்றும், முதுகுத்தண்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் முதுகுத் தண்டு சரியாக வளர்ச்சியடையாதபோது, ​​பல்வேறு பிறவி குறைபாடுகள் ஏற்படுகிறது. முதுகுதண்டு வடம் அதைச் சுற்றியுள்ள திசுக்கள் அசாதாரணமாக இணைக்கப்பட்ட ஒரு நிலையை உருவாக்கி, ஒரு வால் போன்று வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

எனினும் பொதுவாக யாருக்கும் இதுபோன்று வராது உலகில் 40 பேருக்கு மட்டுமே பிறந்ததாகவும் அதுவும் வாலை அகற்றும் போது நரம்பியல் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆனால் ஏய்மஸ் மருத்துவர்கள் செய்த அறுவை சிகிச்சையின் 6 மாதங்களுக்கு பிறகு குழந்தை வால் அகற்றிய பின்னரும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த அபூர்வ சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • ajith kumar and sivakarthikeyan on csk vs srh match அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!