இந்திய விண்வெளி பயணத்தில் புதிய அத்தியாயம் : சந்திரயான் 3 குறித்து மனம் நெகிழ்ந்த பிரதமர் மோடி!!
Author: Udayachandran RadhaKrishnan14 July 2023, 4:13 pm
இந்தியா உட்பட உலக நாடுகள் ஆவலுடன் காத்திருந்த சந்திரயான்-3 விண்கலம், இன்று ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவு தளத்திலிருந்து, LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. லேண்டர், ரோவர் உள்ளிட்டவையுடன் சந்திரயான் – 3 விண்கலம் நிலவின் தரை பரப்பை ஆய்வு செய்யும்.
சந்திராயன் 3 விண்கலம் நிலவை ஆகஸ்ட் 23 அல்லது 24ம் தேதி, நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் முதல் விண்கலம் என்ற பெருமையை பெறும் சந்திரயான்–3, இன்று விண்ணில் ஏவப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது டிவீட்டில், சந்திரயான்-3 இந்தியாவின் விண்வெளி பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறது, ஒவ்வொரு இந்தியனின் கனவுகளையும் லட்சியங்களையும் உயர்த்தி, உயரமாக உயர்கிறது.
Chandrayaan-3 scripts a new chapter in India's space odyssey. It soars high, elevating the dreams and ambitions of every Indian. This momentous achievement is a testament to our scientists' relentless dedication. I salute their spirit and ingenuity! https://t.co/gko6fnOUaK
— Narendra Modi (@narendramodi) July 14, 2023
இந்த முக்கியமான சாதனை நமது விஞ்ஞானிகளின் அயராத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும், இதற்காக நான் தலை வணங்குகிறேன் என தெரிவித்துள்ளார்.