ஆற்றை கடந்த போது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நபர் : நெஞ்சை உலுக்கும் பதற வைக்கும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2022, 5:39 pm

ஆந்திரா : ஆற்றை கடந்து சென்ற போது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி ஒருவர் பலியான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் கனமழை காரணமாக ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் ஓடும் வக்கீரா காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஐந்து பேர் கரை புரண்டு ஓடும் காற்றாற்று வெள்ளத்தை கடந்து செல்ல முயன்றனர்.

அப்போது அவர்களில் மட்டிலெட்டி என்பவர் கால் தவறி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை மீட்ட அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக மரணமடைந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

  • a scene leaked in internet from thug life movie என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?