பாலத்தின் கீழ் சிக்கிய விமானம்.. ஆச்சரியமா இருக்கா? வாடிக்கையாளர்களை கவர எடுத்த முயற்சியின் போது விபத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
14 November 2022, 12:57 pm

ஹோட்டலாக மாற்ற லாரியில் கொண்டு செல்ல போட்ட போது பாலத்தின் அடியில் சிக்கிய விமானம்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்தா ஹவுஸ் நிறுவனத்தினர் பழைய விமானத்தை ஓட்டலாக மாற்றி வாடிக்கையாளர்களை கவர முடிவு செய்தனர்.

இதற்காக கேரள மாநிலம் கொச்சியில் பழைய விமானம் ஒன்றை வாங்கி ராட்சத லாரியில் ஹைதரபாத் கொண்டு சென்றனர் .

ராட்சத லாரியில் ஏற்றப்பட்ட விமானம் சாலை வழியாக ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஆந்திர மாநிலம் ​​பாபட்லா மாவட்டம் மேதரமெட்லாவில் உள்ள மேம் பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்டது.

இதனை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேம்பாலத்தில் இருந்து விமானம் சேதமடையாமல் கவனமாக வெளியே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வேறு வழியில் விமானம் ஹைதராபாத் நோக்கி பயணித்து கொண்டுள்ளது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…