நடுரோட்டில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம்.. அரசு மருத்துவமனை அலட்சியத்தால் நடுவீதியில் நடந்த அவலம் : மனிதத்தை விதைத்த சிசு!!

Author: Udayachandran RadhaKrishnan
21 November 2022, 1:50 pm

ஆந்திர மாநில சுகாதார துறை அதிகாரிகள் அரசு மருத்துவமனைகளுக்கு ஒரு நிபந்தனையை விரித்துள்ளனர். இதனால் நிறைமாத கர்ப்பிணியான ஒரு பெண் திருப்பதியில் நடுவீதியில் குழந்தையை பெற்றெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நிறைமாத கர்ப்பிணியான ஒரு பெண் பிரசவத்திற்காக திருப்பதி உள்ள அரசு மருத்துவமனைக்கு நேற்று சென்றார். அவருடன் யாரும் இல்லை.

அந்த சமயத்தில் அந்தப் பெண்ணுடன் யாரும் துணைக்கு இல்லை துணைக்கு ஆள் இல்லாத நிலையில் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்க இயலாது என்று ஊழியர்கள் அவரை திருப்பி அனுப்பி விட்டனர்.

வீடு திரும்பிய பெண்ணுக்கு மருத்துவமனை அருகிலேயே பிரசவ வலி ஏற்பட்டு சாலையில் விழுந்து துடித்தார். இதனை பார்த்த சிலர் ஓடி சென்று பெட் சீட்டுகளை கொண்டு வந்து மறைப்பு ஏற்படுத்தி அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர்.

இது பற்றி விளக்கம் அளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம் உதவியாளர் இல்லாமல் கர்ப்பிணியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்க கூடாது என்ற நிபந்தனையை அரசு விதித்துள்ளது. நிபந்தனையின் அடிப்படையிலேயே நாங்கள் செயல்படுட்டோம் என்று கூறியுள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 426

    0

    0