கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்து : அலறிய பயணிகள்..!!

Author: Udayachandran RadhaKrishnan
1 June 2024, 1:53 pm

கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்து : அலறிய பயணிகள்..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கந்துகூருக்கு தனியார் பேருந்து நேற்று இரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.

இந்த பேருந்து பல்நாடு சிலகலுரிப்பேட்டை மண்டலம் லிங்குட்லா என்ற இடத்தில் வந்த போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் இருந்த இருபது பேர் காயமடைந்தனர்.இதில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சிலகல்லூர் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க: தமிழகத்தில் இப்படி ஒரு அரசா? கேவலமா இருக்கு : பாஜகதாங்க ஜெயிக்கும்.. எல்.முருகன் உறுதி!

விபத்து நடந்த விதம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…
  • Close menu