திருமணமான பெண்ணை கடத்தி தினம் தினம் பலாத்காரம் செய்த சைக்கோ : இடத்தை மாற்றி மாற்றி இச்சையை தீர்த்த கொடூரன்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 January 2023, 4:53 pm

திருமணமான பெண்ணை பலவந்தமாக கடத்தி சென்று இரண்டு மாதம் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருப்பதி மாவட்டம் பலிஜபள்ளியை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மனைவி சின்னா. கடந்த நவம்பர் மாதம் 17ஆம் தேதி சின்னாவை அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் பலவந்தமாக கடத்தி சென்றார்.

அப்போது முதல் வெவ்வேறு இடங்களில் சின்னாவை அடைத்து வைத்த நாகராஜ் கடந்த இரண்டு மாத காலமாக பலாத்காரம் செய்து வந்தார்.

இது தொடர்பாக ராமச்சந்திராபுரம் காவல் நிலையத்தில் பிரகாஷ் புகார் அளித்திருந்தார். ஆனால் போலீசார் அதனை கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலையில் பிரகாஷ் கடந்த ஆறாம் தேதி திருப்பதி எஸ் பி அலுவலகத்தில் தன்னுடைய மனைவியை நாகராஜ் கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்தார்.

இந்த நிலையில் சின்னா, தன்னை வீட்டுக்கு அனுப்பி வைக்கா விட்டால், தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினார். எனவே நாகராஜ் நேற்று சின்னாவை பலிஜபள்ளி கிராமத்திற்கு அழைத்து வந்து விட்டு சென்று விட்டார்.

அவமானம் தாங்க முடியாமல் சின்னா தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச சென்ற கணவன் மற்றும் உறவினர்கள் காப்பாற்றினர்.

இந்த நிலையில் எஸ் பி அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார் திருப்பதி மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி மகளிர் காவல் நிலைய போலீசார் நாகராஜ் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல் காலம் கடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்பட்டுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 491

    0

    0