8ஆம் வகுப்பு மாணவிக்கு LOVE LETTER.. திருமணத்துக்கு தயார் என எழுதிய பள்ளி ஆசிரியர் : அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 January 2023, 2:03 pm

8ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய பள்ளி ஆசிரியர் திருமணம் செய்ய தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் சதார் கொத்வாலி கிராமத்தில் உயர்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் படித்து வரும் 8-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு ஹரி ஓம் சிங் (வயது 47) என்ற ஆசிரியர் காதல் கடிதம் ஒன்றை எழுதி கொடுத்துள்ளார்.

அந்த கடிதத்தில், உன்னை அதிகம் விரும்புகிறேன் என்றும் விடுமுறை காலத்தில் நீயில்லாதது அதிக வருத்தம் தரும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

எப்போது முடியுமோ அப்போது, தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு தன்னிடம் பேசும்படியும் கடிதத்தில் கூறியுள்ளார். தேர்வு கால விடுமுறை விடுவதற்கு முன்பு தனியாக தன்னை வந்து சந்திக்கும்படியும், திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றும் அந்த மாணவிக்கு எழுதிய கடிதத்தில் ஆசிரியர் தெரிவித்து உள்ளார்.

12 வரிகள் கொண்ட அந்த கடிதத்தில், படித்தவுடன் அதனை கிழித்து விடவும் எனவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். ஆனால், அந்த மாணவி கடிதத்தில் உள்ள விசயங்களை படித்து அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

அதனை பார்த்த அவரது தந்தை என்னவென கேட்டுள்ளார். அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கடிதம் அவரது குடும்பத்தினருக்கு சென்றுள்ளது. அவர்களும் அதனை படித்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதன்பின், ஆசிரியரை மாணவியின் தந்தை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதற்கு அந்த ஆசிரியர், தன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது என கூறியதுடன், தொடர்ந்து துன்புறுத்தினால் மாணவியை கடத்தி சென்று விடுவேன் என கூறி தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

தொடர்ந்து வேறு வேறு எண்களில் இருந்து அழைத்து, மாணவியின் தந்தையை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுமுள்ளார். அந்த மாணவியின் தந்தை, போலீசில் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்து உள்ளார்.

கன்னோஜ் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு குன்வர் சிங் வழக்கு பதிந்து உள்ளார். ஆசிரியருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?