காங்கிரஸ் தலைவர்களை சுட்டுக் கொல்ல தனிச்சட்டம் இயற்ற வேண்டும் : பகீர் கிளப்பிய பாஜக மூத்த தலைவரால் சர்ச்சை!

Author: Udayachandran RadhaKrishnan
9 February 2024, 4:20 pm

காங்கிரஸ் தலைவர்களை சுட்டுக் கொல்ல தனிச்சட்டம் இயற்ற வேண்டும் : பகீர் கிளப்பிய பாஜக மூத்த தலைவரால் சர்ச்சை!

காங்கிரஸ் தலைவர்கள் சுட்டு தள்ள தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என பாஜகவின் ஈஸ்வரப்பா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்று சித்தாராமையா முதலமைச்சராகவும். டிகே சிவக்குமார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.

தொடர்ந்து தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை படிப்டிபாய நிறைவேற்றியும் வருகின்றனர். இந்த நிலையில் தாகாவங்கரே மாவட்டத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் கேஎஸ் ஈஸ்வரப்பா பங்கேற்று பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அவர் பேசியதாவது, நாட்டை பிளவுபடுத்தும் வகையில் மீண்டும் பேசினால் டி.கே. சுரேஷ் மற்றும் வினய் குல்கர்னி ஆகியோர் தேசத் துரோகிகள் என்று நரேந்திர மோடியிடம் தெரிவிப்பேன். அவர்கள் இந்த தேசத்தைத் துண்டு துண்டாகப் பிரிக்க விரும்புகிறார்கள். அவர்களைச் சுட்டுக் கொல்ல சட்டம் வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

ஈஸ்வரப்பாவின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பல்வேறு தரப்பினரும் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக கடந்த மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஈஸ்வரப்பா, “பல கோயில்கள் இடித்து அந்த கோயில் நிலங்களில் தான் மசூதிகளைக் கட்டியுள்ளனர். அந்த மசூதிகளை உடனே காலி செய்யுங்கள்.. மசூதிகளைத் தானாக முன்வந்து காலி செய்யாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று அவர் கூறியிருந்தார். அதேபோல கடந்த ஆண்டும் ஈஸ்வரப்பா மசூதிகள் இடிக்கப்பட்டு கோயில்கள் கட்டப்படும் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?