விநாயகர் சிலை முன்பு மேடை அமைத்து இளம்பெண்களுடன் இளைஞர்கள் ஆபாச நடனம்.. ஷாக் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2024, 2:33 pm

திருப்பதியில் உள்ள அலிப்பிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சப்தகிரி நகரில் அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 15 அடி உயரத்திற்கு பிரம்மாண்ட விநாயகர் சிலையை ஏற்பாடு செய்து மண்டபம் அமைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடினார்.

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வெளியூர்களில் இருந்து ரெக்கார்ட் டான்ஸ் குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் விநாயகர் சிலை முன் மிகவும் ஆபாசமாகவும் அருவருக்க வகையிலும் நடனம் ஆடி உள்ளனர். அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்கள் மூலம் பரவி திருப்பதி போலீசாரின் கவனத்திற்கு சென்றது.

இதன் அடிப்படையில் விநாயகர் சிலை ஏற்பாட்டாளர்கள் ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்த அலிப்பிரி போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி