புகழ்பெற்ற ஸ்ரீசைலம் கோவிலில் பயங்கர சத்தத்துடன் நடந்த திடீர் விபத்து : 3 பக்தர்கள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 February 2023, 6:48 pm

ஸ்ரீசைலம் கோவிலில் பயங்கர சத்தத்துடன் நடந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் புகழ்பெற்ற சிவன் கோவில் உள்ளது. பிரம்மராம்பா சமேத மல்லிகார்ஜுன சுவாமி கோவில் ஆன அந்த கோவிலுக்கு பெருமளவில் பக்தர்கள் வருவது வழக்கம்.

அங்கு இன்று துவங்கி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரம்மோற்சவ துவக்க நாளான இன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அமைக்கப்பட்டிருக்கும் சமையல் கூடத்திற்கு வெளியே இருந்த பாய்லர் திடீரென்று வெடித்து விபத்து ஏற்பட்டது.

சாதம் சமைப்பதற்காக தண்ணீரை ஆவியாக்கி சமையல் அறைக்கு அனுப்புவதற்காக அங்கு ராட்சத பாய்லர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் ஒரு பாய்லர் வெடித்து ஊழியர்கள் இரண்டு பேர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை உடனடியாக கோவில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிரம்மோற்சவ துவக்க நாளன்று நடைபெற்ற விபத்து காரணமாக கோவில் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. விபத்து பற்றி வழக்கு பதிவு செய்துள்ள ஸ்ரீசைலம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 456

    0

    0