நள்ளிரவில் திடீர் நிலநடுக்கம்… அதிர்ந்து போன பஞ்சாப்… அச்சத்தில் மாநில மக்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan4 February 2024, 11:18 am
நள்ளிரவில் திடீர் நிலநடுக்கம்… அதிர்ந்து போன பஞ்சாப்… அச்சத்தில் மாநில மக்கள்!!
பஞ்சாப் மாநிலம் பண்டிண்டா மாவட்டத்தில் நள்ளிரவு 1.32 மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ரிக்டர் அளவில் 4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் மிதமான அதிர்வுகள் தென்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
பூமிக்கு அடியில் 80 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த மிதமான நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கம் காரணமாக எந்த பாதிப்புகளும் ஏற்பட்டதாக தெரியவில்லை.