டிவி நடிகை தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் : போலீஸ் வலையில் சிக்கிய பிரபல தொழிலதிபர்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2022, 9:55 pm

பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்ற நடிகையாக அறியப்பட்டவர் வைஷாலி தக்கார். மத்திய பிரதேசத்தின் இந்தூரில் வசித்து வந்த அவர், தனது வீட்டில் கடந்த 15-ந்தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வைஷாலி தற்கொலை செய்த அறையில் குறிப்பு ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.

அதில், சில காலம் வரை அதிக மனஅழுத்தத்தில் அவர் இருந்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது. அதனை குறிப்பில் அவர் குறிப்பிட்டு உள்ளார். தனது முன்னாள் காதலரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வந்தேன் என்றும் தெரிவித்து உள்ளார்.
ஆனால், முன்னாள் காதலரின் பெயர் வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களிடம் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்த விசயங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

கணவராக வர போகிறவர் டாக்டர் அபிநந்தன் சிங் என குறிப்பிட்டார். கென்யா நாட்டை சேர்ந்த பல் மருத்துவர் அவர் என தெரிவித்து உள்ளார். குடும்பத்துடன் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். எனினும், ஒரு மாதத்திற்கு பின்னர், அபிநந்தனை திருமணம் செய்யபோவதில்லை என தெரிவித்து உள்ளார்.

ஜூனில் நடக்க இருந்த திருமணமும் ரத்து செய்யப்பட்டது. சமூக ஊடகத்தில் இருந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சி பற்றிய வீடியோவையும் அவர் நீக்கி விட்டார். இந்த நிலையில், வைஷாலியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் முன்னாள் காதலரான ராகுல் நவ்லானி மற்றும் அவரது மனைவி திஷா மீது வழக்கு பதிவாகி உள்ளது.

அண்டை வீட்டில் வசித்து வந்த ராகுலை இந்தூரில் வைத்து போலீசார் இன்று கைது செய்துள்ளனர். தொழிலதிபரான அவருடன் வைஷாலி கடந்த காலத்தில் தொடர்பில் இருந்துள்ளார்.

இதனை அடுத்து வைஷாலியை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளதுடன், அவர் திருமணம் செய்ய விடாமலும் தடுத்துள்ளார் என குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதுபற்றி காவல் துறை ஆணையாளர் ஹரிநாராயணாச்சாரி மிஷ்ரா கூறும்போது, வழக்கு பதிவான பின்பு, ராகுல் காணாமல் போய் விட்டார். பின்னர் அவர் இன்று கைது செய்யப்பட்டு விட்டார்.

ராகுலுடனான வைஷாலியின் தொடர்பு பற்றி நடிகையின் குடும்பத்தினருக்கு தெரியும். வைஷாலி பற்றி ராகுலே வதந்திகளை பரப்பியுள்ளார் என குடும்பத்தினர் வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளனர்.

மணமகனாக வருபவர்களிடம், தன்னுடனான தொடர்பு பற்றி கூறியும், வைஷாலியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியும் வந்துள்ளார். இதனாலேயே பல் மருத்துவருடனான திருமணம் ரத்து செய்யப்பட்டது.

வேறு யாருடனாவது திருமணம் செய்து வைக்க வைஷாலி குடும்பத்தினர் முயலும்போதும், இதே வேலையில் ராகுல் ஈடுபட்டு உள்ளார் என அவர் கூறியுள்ளார்.
வைஷாலி தக்கார், சசுரால் சிமர் கா என்ற தொடரில் அஞ்சலி பரத்வாஜ் ஆகவும், சூப்பர் சிஸ்டர்சில் ஷிவானி சர்மா ஆகவும், மன்மோகினி 2-ல் அனன்யா மிஷ்ரா ஆகவும் நடித்து புகழ் பெற்றவர்.

கடைசியாக ரக்சாபந்தன் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கனக் சிங்சால் சிங் தாக்கூர் என்ற பெயரில் நடித்திருந்த நிலையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 521

    0

    0