நடுத்தெருவில் காதலிக்கு தாலி கட்டிய வாலிபர் : வைரலான வீடியோவால் பாய்ந்த வழக்கு.. விசாரணையில் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
22 January 2023, 5:30 pm

நடுரோட்டில் காதலிக்கு தாலி கட்டிய வாலிபர் உட்பட உறவினர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அமிடாலா கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் எட்டாம் வகுப்பு படிக்கும் தன்னுடைய உறவு முறை சிறுமி ஒருவரை காதலித்து வந்தார்.

இரண்டு பேருக்கும் திருமணம் செய்ய இரண்டு வீட்டாரும் முடிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று அந்த சிறுமியை வீட்டு வாசலில் நிறுத்தி அந்த வாலிபர் தாலி கட்டினார்.

இந்த திருமணம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. தகவல் அறிந்து அங்கு வந்த சமூக ஆர்வலர்கள் அந்த திருமணம் பற்றி உறுதி செய்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த உரவகொண்டா போலீசார் தாலி கட்டிய வாலிபர், அவர்களுடைய உறவினர்கள் ஆகியோர் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டம் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்துகின்றனர்.

  • national award missed for paradesi movie because of bala video தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?