ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்.. கால் தவறி விழுந்த சோகம் : கடவுள் போல வந்த பெண் காவலர்.. வைரல் வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan1 June 2023, 10:14 am
ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்ணை பிளாட்பாரத்தின் நடுவில் விழுந்து காப்பாற்றிய ஆர்பிஎப் பெண் காவலர் சனிதாவை அதிகாரிகள் மற்றும் பயணிகள் பாராட்டினர்.
செகந்திராபாத் பேகம்பேட் ரயில் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை செகந்திராபாத் ஆர்பிஎஃப் மூத்த பிரிவு பாதுகாப்பு அதிகாரி தேபாஷ்மிதா சி பானர்ஜி வெளியிட்டுள்ளார்.
சனிதா தனது கடமைகளை அர்ப்பணிப்புடன் செய்வார் என்று தேபாஷ்மிதா கூறினார்.
மிஷன் ஜீவன் ரக்ஷா சிறப்பாக நடந்து வருவதாகவும், ரயில்வே பயணிகளை பாதுகாப்பதற்காக ஆர்பிஎஃப் போலீசார் தங்கள் உயிரை பணயம் வைத்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் ஏதேனும் சிரமங்களை எதிர்கொண்டால் அருகில் உள்ள RPF போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் அல்லது ரயில்வே ஹெல்ப்லைன் 139 ஐ அழைக்க வேண்டும் என்று தெரியவந்துள்ளது.