ஆசிரமத்தில் தங்கிய பெண் கூட்டுப்பாலியல் : போதை மருந்து கொடுத்து மயக்கி பலாத்காரம்… ஆசிரமத்தில் போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2022, 9:36 pm

உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் ஆசிரமம் ஒன்று உள்ளது. இதில், பிரயாக்ராஜ் நகரின் கர்ச்சனா பகுதியை சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் தங்கியுள்ளார்.

இந்த நிலையில், அவர் கோமதி நகர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்து உள்ளார். அதுபற்றி காவல் அதிகாரி தினேஷ் மிஷ்ரா கூறும்போது, கடந்த 4-ந்தேதி போதை பொருட்கள் சிலவற்றை தனக்கு கொடுத்தனர் என அந்த பெண் புகாரில் தெரிவித்து உள்ளார்.

இதன்பின்பு, சுயநினைவிழந்த பெண்ணை ஆசிரமத்தில் உள்ளவர்களில் சிலர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுபற்றி துர்வாசா, சோட்டே மாவ்னி, பர்ஹி மாவ்னி மற்றும் மன்மோகன் என 4 பேர் மீது அந்த பெண் பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் அந்த பெண்ணை கொலை செய்து விடுவோம் என அவர்கள் 4 பேரும் மிரட்டியுமுள்ளனர். இதனை தொடர்ந்து, ஆசிரமவாசிகளான 4 பேர் மீதும் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் பற்றி விசாரணை நடந்து வருகிறது என போலீஸ் துணை கமிஷனர் பிராச்சி சிங் தெரிவித்து உள்ளார்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 500

    0

    0