தண்டவாளத்துக்கு இடையில் சிக்கிய பெண்ணின் கால்.. நெருங்கிய ரயில் ; ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
27 August 2024, 11:47 am

தெலுங்கானா மாநிலம் விகாரபத் மாவட்டத்தில் உள்ள நவான்ஹி ரயில் நிலையம் அருகே ஒரு பெண் தண்டவாளத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது அவருடைய ஒரு கால் தண்டவாளங்களுக்கு இடையே சிக்கிக்கொண்டது.

அதே நேரத்தில் சரக்கு ரயில் ஒன்று அந்த தண்டவாளம் வழியாக வேகமாக வந்து கொண்டிருந்தது.

எனவே தனக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டு விட்டது என்பதை உணர்ந்த அந்த பெண் ஒரு வினாடி கூட தாமதிக்காமல் தண்டவாளங்களுக்கு இடையே தன்னுடைய உடலை குறுக்கி படுத்துக்கொண்டார்.

எனவே அவர் மீது மோதாமல் அந்த சரக்கு ரயிலின் அனைத்து பெட்டிகளும் கடந்து சென்றன.

அதன் பின் அந்த பெண் ரயில் கடந்து விட்டதா என்பதை கவனித்து எழுந்து தண்டவாளங்களுக்கு இடையே சிக்கிக் கொண்டிருந்த தன்னுடைய காலை பத்திரமாக மீட்டு அங்கிருந்து சென்றார்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 260

    0

    0