காருக்குள் வைத்து இளம்பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம் : நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 April 2023, 9:53 pm

காருக்குள் வைத்து இளம்பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம் : நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 15 ஆம் தேதி கோரமங்களா பகுதியில் 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அங்கிருந்த பூங்கா ஒன்றில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் இளம்பெண்ணை காரில் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது.
கார் கோரமங்களா பகுதியிலிருந்து ஓசூர் சாலையில் 40 கிலோமீட்டர் வரை பயணித்து அத்திப்பள்ளி என்ற பகுதி வரை சென்றுவிட்டு மீண்டும் கார் கோரமங்களா பகுதிக்கே வந்துள்ளது.
இந்த பயண இடைவெளியில் இளம்பெண் பலமுறை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அங்கு மீண்டும் அந்தப் பெண்ணை கீழே இறக்கி விட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசாரிடம் அந்த பெண் புகாரளித்த நிலையில் இதுதொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நான்கு பேரை கைது செய்த போலீசார் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு பயன்படுத்திய காரையும் கண்டுபிடித்தனர். பெங்களூருவில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 487

    0

    0