ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் போது இளைஞருக்கு திடீர் மாரடைப்பு : அதிர வைத்த அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2023, 8:29 pm

ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் போது இளைஞருக்கு திடீர் மாரடைப்பு : அதிர வைத்த அதிர்ச்சி வீடியோ!!

மாரடைப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அன்மைகாலமாக அதிகரித்து வரும் நிலையில், உ.பி.யின் காஜியாபாத்தில் உள்ள ஜிம்மில் இருந்து டிரெட்மில்லில் ஓடும் போது மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. நபர் ஒருவர் சரிந்து விழுவது போன்ற அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, 21 வயதுடைய அந்த இளைஞன் சம்பவ இடத்திலே உயிரிழந்துவிட்டார்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவில் ” இறந்தவர், நீல நிற டி-ஷர்ட் அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்துகொண்டு இருக்கிறார். பிறகு தனக்குள் எதோ செய்வதை உணரும் அவர் மெதுவாக உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டு அப்டியே டிரெட்மில்லில் நெஞ்சு வலி காரணமாக அப்படியே விழுகிறார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் வேகமாக வந்து அவரை எழுப்பிகிறார்கள். ஆனால், அந்த இளைஞன் எழுந்திருக்கவில்லை. பிறகு அவரை அப்படியே மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள்” அத்துடன் வீடியோ காட்சிகள் முடிகிறது. பிறகு அந்த இளைஞரைப் பரிசோதித்த மருத்துவர், உயிரற்ற நிலையில் இளைஞர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாகவும், இதய செயலிழப்பால் அவர் உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இறந்த இளைஞன் பெயர் சிங் என தெரிய வந்துள்ளது. அவருடைய உடலை குடும்பத்தினர் பிரேத பரிசோதனை செய்ய மறுத்துவிட்டதாகவும், அதற்கு பதிலாக அவரது உடலை சிவனில் உள்ள தங்கள் கிராமத்திற்கு கொண்டு செல்ல அனுமதி கோரியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மாரடைப்பால் இளம் வயதிலேயே இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 361

    0

    0