இளம் வயது எம்எல்ஏவை கரம் பிடித்த இளம் மேயர் : முதலமைச்சர் தலைமையில் நடந்த திருமணம்… வாழ்த்து மழையில் நனைந்த தம்பதி!!

Author: Udayachandran RadhaKrishnan
5 September 2022, 12:52 pm

கேரளாவில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வுக்கும், திருவனந்தபுரம் மேயருக்கும் நேற்று திருமணம் நடந்தது.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பாலுச்சேரி தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,வாக சச்சின் தேவ், 28, பதவி வகிக்கிறார்.

இவர், மாநிலத்தின் இளம் வயது எம்.எல்.ஏ., என்ற பெருமைக்குரியவர். திருவனந்தபுரம் மேயராக, அதே கட்சியை சேர்ந்த ஆர்யா ராஜேந்திரன், 22, பதவி வகிக்கிறார். கல்லுாரியில் படித்துக் கொண்டிருந்த போதே மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்ற ஆர்யா, நாட்டின் இளம் வயது மேயர் என்ற பெருமையும் உடையவர்.

சச்சின் தேவ் – ஆர்யா ஆகியோருக்கு கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் நேற்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் எளிய முறையில் திருமணம் நடந்தது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ