பீச் ஓரத்தில் பீர் அருந்திய இளம்பெண் : தட்டி கேட்ட காவலரை காலால் எட்டி உதைத்து அட்டூழியம்.. அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
15 December 2022, 12:47 pm

ஆண் நண்பரிடம் சொல்லி உன்னை தொலைத்து விடுவேன் என்று போலீஸ் அதிகாரியை குடிபோதையில் இளம் பெண் மிரட்டிய சமப்வம் அரங்கேறியுள்ளது.

விசாகப்பட்டினம் போலீசார் நேற்று இரவு ஜீப்பில் ரவுண்ட்ஸ் சென்று கொண்டிருந்தனர். அப்போது விசாகப்பட்டினம் ஆர். கே. பீச் அருகே இளம் பெண் ஒருவர் சாலையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார்.

அவரை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைக்க கருதிய காவல் ஆய்வாளர் சத்யநாராயணா அந்த பெண்ணை அழைத்து, நள்ளிரவு நேரத்தில் இது போல் சாலையில் அமர்ந்து குடிப்பது தவறு என்று அறிவுரை கூறினார்.

மேலும் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று எச்சரித்தார். ஆனால் ஏற்கனவே போதையில் இருந்த அந்த பெண் பீர்பாட்டிலை கையில் வைத்து கொண்டு என்னுடைய ஆண் நண்பரிடம் சொல்லி உன்னை தொலைத்து விடுவேன் என்று கூறி திடீரென்று பாய்ந்து காவல் ஆய்வாளரை தாக்கினார்.

மேலும் அவரை காலால் எட்டி உதைத்தார். இந்த சம்பவம் பற்றி விசாகப்பட்டினம் மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

விரைந்து வந்த மகளிர் போலீசார் அந்த பெண்ணை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர் குடித்திருக்கிறாரா என்று சோதனை செய்தனர்.

அப்போது அவருடைய மூச்சுக்காற்றில் 148.1 அளவிற்கு ஆல்கஹால் இருப்பது தெரிய வந்தது. போலீசாரை தாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் அமுல்யா என்று தெரிய வந்தது.

  • lokesh kanagaraj decided to take break from social media லோகேஷ் கனகராஜ் எடுத்த திடீர் முடிவு! என்ன சார் கடைசில இப்படி பண்ணிட்டீங்களே?