இனி ஆதார் கார்டும் RENEWAL பண்ணணும் : மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. எத்தனை வருடம்னு தெரியுமா?!!

Author: Udayachandran RadhaKrishnan
10 November 2022, 8:35 pm

ஆதார் கார்டு எடுத்துள்ளவர்கள், ஆதார் பதிவு மையம் அல்லது பொது சேவை மையத்தில் ஆன்லைன் மூலம் விவரங்களைப் புதுப்பிக்கலாம்.

ஆதார் அட்டைக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் அரசு திருத்தம் செய்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டுமென மத்திய அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை கூறியிருப்பதாவது, ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள், ஆதார் பதிவு செய்த நாளில் இருந்து, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு பிறகு, , அடையாள சான்று மற்றும் முகவரி சான்று போன்ற உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும்.

இது மத்திய அரசின் தரவு களஞ்சியத்தில் தகவல்களை துல்லியமாக உறுதிப்படுத்துவதுடன், ஆணையம் குறிப்பிடும் காலத்திற்குள் மேற்கொள்ள வேண்டும். மேலும், 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் ஆதார் அட்டையைப் பெற்று, அதன் பிறகு இதுவரை புதுப்பிக்காத நபர்கள், அத்தகைய ஆதார் எண் வைத்திருப்பவர்கள் ஆவணங்களைப் அளித்து புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு எடுத்து 10 ஆண்டுகள் முடிந்தவர்கள், ஆதார் விவரங்களை புதுப்பிக்காதவர்கள், ஆன்-லைன் மூலமோ அல்லது மை ஆதார் போர்டல் மூலம் விவரங்களைப் புதுப்பிக்கலாம். இல்லாவிட்டால் ஆதார் பதிவு மையம் அல்லது பொது சேவை மையத்தில் புதுப்பிக்கலாம்.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!