பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்- ஆந்திராவில் அதிர்ச்சி!

Author:
22 June 2024, 11:17 am

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் சீதாராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுசரிதா. திருமணம் ஆகாத இவருக்கு வயது 21. இவர் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றுள்ளார். வெளியே சென்ற அவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர்.

அப்போது அருகில் இருந்த ரயில்வே டிராக் அருகில் சுசரிதா ஆடைகள் கிழிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இந்த தகவல் அறிந்து வந்த சீராள கிராமிய காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போது சுசரிதா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.அதைத் தொடர்ந்து மோப்பநாய்,தடவிகள் நிபுணர்களை வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வகுல் ஜிண்டால் நேரில் சென்று பார்வையிட்டு தீவிர விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய ஐந்து தனிப்படைகள் அமைத்து தேடி வருவதாகவும் தெரிவித்தார். இச்சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?