‘குஜராத்திற்கு எதிரான கட்சி ஆம்ஆத்மி’… வேட்பு மனுவை வாபஸ் பெற்ற ஆம்ஆத்மி வேட்பாளர் ; பாஜகவுக்கு எதிரான குற்றச்சாட்டில் புதிய திருப்பம்…!!

Author: Babu Lakshmanan
16 November 2022, 9:15 pm

குஜராத்தில் ஆம்ஆத்மி வேட்பாளரை பாஜகவினர் கடத்திச் சென்று விட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், கடத்தப்பட்டதாக சொல்லப்படுபவர் அளித்த விளக்கம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவையில் நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சூரத் (கிழக்கு) தொகுதியில் கஞ்சன் ஜரிவாலா ஆம்ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதனிடையே, ஆம்ஆத்மி வேட்பாளர் ஜரிவாலாவை பாஜகவினர் துப்பாக்கி காட்டி கடத்திச் சென்று விட்டதாக ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். பாஜக தோல்வி பயத்தில் இருப்பதாகவும், அதனால் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை கடத்தியதாகவும் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா விமர்சித்துள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:- என்னை யாரும் கட்டாயப்படுத்தியதால் வேட்பு மனுவை வாபஸ் பெறவில்லை. நானாக முன்வந்துதான் இந்த முடிவை எடுத்தேன். நான் பிரசாரம் செய்யும்போது, தேசவிரோத மற்றும் குஜராத்திற்கு எதிரான கட்சியின் வேட்பாளராக ஏன் போட்டியிடுகிறீர்கள்? என மக்கள் என்னிடம் கேட்டார்கள். நானும் யோசித்துப் பார்த்தேன். என் உள் மனம் சொல்வதை கேட்டேன். எந்த அழுத்தமும் இன்றி வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளேன். அப்படிப்பட்ட கட்சியை என்னால் ஆதரிக்க முடியாது, எனக் கூறினார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்