சிதறிய சதை.. பறிபோன இளைஞர்களின் உயிர்.. டேராடூன் கொடூர விபத்து
Author: Hariharasudhan15 November 2024, 11:58 am
டேராடூனில் ஏற்பட்ட கோர விபத்தில் 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகரான டேராடூன் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பக் கூடிய இடமாகும். இங்கு அம்மாநில மக்கள் மட்டுமல்லாது, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் இயற்கை பனியை ரசிக்க நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர்.
இந்த நிலையில், இன்று (நவ.15) அதிகாலை 1.30 மணியளவில் டேராடூனின் ஓஎன்ஜிசி சவுக் பகுதியில் அதிவேகமாக வந்த இன்னோவா கார் ஒன்று கண்டெய்னர் லாரி மீது நேருக்கு நேர் மோதி உள்ளது. இதில் நிலைகுலைந்த கார், சுக்குநூறாக நொறுங்கி உள்ளது.
பின்னர், இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்து உள்ளனர். அதேபோல், அவ்வழியாகச் சென்றவர்களும் இறங்கி காரினுள் வந்து பார்த்து உள்ளனர். அப்போது அதில் 6 பேர் பயணம் செய்திருந்தது தெரிய வந்து உள்ளது. இதனையடுத்து, உள்ளே இருந்தவர்களை மீட்க முடியாமல் அனைவரும் பார்த்து உள்ளனர்.
பின்னர், இது குறித்து போலீசார் மற்றும் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்து உள்ளனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காரினுள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். அப்போது தான், அதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும், மேலும் ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் இருந்ததும் தெரிய வந்து உள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் செந்தில் பாலாஜிக்கு செக்… அதிமுக கொடுத்த பரபரப்பு புகார்!
இதனையடுத்து, படுகாயங்கள் உடன் ஆபத்தான நிலையில் இருந்து மீட்கப்பட்ட நபர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மேலும், உயிரிழந்த 5 பேரும் 25 வயதுக்குள்ளான இளைஞர்கள் என்பது தெரிய வந்து உள்ளது. அதில் 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என்பதும் தெரிய வந்து உள்ளது.
அதேநேரம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர் 25 வயதுடைய சித்தேஷ் அகர்வால் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. இருப்பினும், அவருக்கு சுயநினைவு இல்லாததால் விசாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மேலும், இதுவரை உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் இருந்து யாரும் புகார் அளிக்கவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.