போராடிய மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்ற போலீஸ் ; அதிர்ச்சி வீடியோ ; எதிர்கட்சிகள் கடும் கண்டனம்..!

Author: Babu Lakshmanan
25 January 2024, 5:04 pm

தெலங்கானாவில் போராட்டம் நடத்திய மாணவியின் தலைமுடியை பிடித்து இரு பெண் காவலர்கள் இழுத்து சென்ற காட்சிகள் வைரலான நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தடுப்பு காவலில் வைத்தனர்.

இருப்பினும், சில மாணவர்கள் தடுப்பை மீறி வெளியே சென்றுள்ளனர். அப்படி, மாணவி ஒருவர் தடுப்பை மீறி வெளியே சென்ற மாணவி ஒருவர் சாலையில் ஓடிச் சென்றுள்ளார். அப்போது, இரண்டு பெண் காவலர்கள் பைக்கில் அந்த மாணவியை பின் தொடர்ந்தனர். பைக்கில் சென்ற பெண் காவலர், மாணவியின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்றுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  • Mufasa The Lion King Tamil Dubbed“முஃபாசா த லயன் கிங்” மிரட்டலாக டப்பிங் கொடுத்துள்ள தமிழ் நடிகர்கள்..!
  • Views: - 432

    0

    0