தெருநாய்கள் விரட்டியதால் நடந்த விபத்து : 3 பேர் தூக்கி வீசப்பட்ட பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2023, 6:20 pm

தெருநாய்களின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ஹவுசிங் சொசைட்டியில் 4 வயது சிறுவனை தெருவில் சுற்றித் திரிந்த தெருநாய்கள் கூட்டமாக சேர்த்து கடித்து குதறி கொன்றது.

இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தில் உள்ள பெர்ஹம்புர் பகுதியில் ஸ்கூட்டியில் இரண்டு பெண்கள், சிறுவனை அமர வைத்து வந்துள்ளார்.

அப்போது தெரு நாய்கள் அந்த வாகனத்தை துரத்தியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த அந்த பெண் பயத்தில் வேகமாக வந்த போது முன்னே நிறுத்தி வைத்திருந்த கார் மீது மோதி 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

https://vimeo.com/814232315

தெருநாய்களால் பயத்தில் நடந்த இந்த விபத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் தெருநாய்களை அடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?