சாலையில் வீலிங் செய்து சாகசம்… ஊசலாடும் இளைஞர்களின் உயிர்கள்… வீடியோவை பகிர்ந்து காவல்துறை அட்வைஸ்!!

Author: Babu Lakshmanan
6 June 2023, 5:02 pm

கர்நாடகாவில் சாகசம் செய்ய நினைத்து இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த காலத்து இளைஞர்கள் செல்போனையும், பைக்கையும் தங்களின் கெத்தாக காட்டி கொள்ளும் பொருட்களாக பார்த்து வருகின்றனர். ஆபத்தான செல்ஃபி மற்றும் ரீல்ஸ்களினால் உயிர்கள் ஒருபுறம் போயிக் கொண்டிருக்கும் வேளையில், பைக் சாகசங்களினாலும் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

கெத்து காட்ட நினைத்து பைக்கில் சாகசம் செய்ய முயன்ற இளைஞர்களுக்கு, எச்சரிக்கை மணி போல, கர்நாடகாவில் சாகசத்தில் ஈடுபட முயன்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி அமைந்துள்ளது.

விஜயநகர் பகுதியில் பட்டப்பகலில் சாலையில் விதிகளை மீறி இரு இளைஞர்கள் பைக்கில் வீலிங் செய்து செல்கின்றனர். இதனை அங்கிருக்கும் சக இளைஞர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது, சிறிது தூரம் சென்ற அவர்களின் பைக், நிலைகுலைந்ததில், பைக் சென்டர் மீடியனில் மோதியுள்ளது. இதில், பைக்கில் பயணித்த இருவரிம் சென்டர் மீடியனின் சுவர் மற்றும் அங்கிருந்த போஸ்ட்டில் பயங்கரமாக மோதிக் கொண்ட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, அவர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து வீடியோவை பகிர்ந்த பெங்களூரூ காவலர் கலா கிருஷ்ணசாமி, ‘வீலிங் செய்யாதே.. உடலை ஊனமாக்காதே, சாலை விதிகளை மதித்து பாதுகாப்பாக பயணம் செய்’ என பதிவிட்டுள்ளார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!