ஆழ்கடலில் மீன்பிடிக்கும் போது விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மீனவர்கள்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!!

Author: Babu Lakshmanan
2 February 2023, 5:12 pm

கேரளா : கேரள மாநிலம் கொச்சி ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற விசைப்படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளான வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் கொச்சி பகுதியில் இருந்து லட்சத்தீவு பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகு நீரில் மூழ்கி விபத்து ஏற்பட்டது. கொச்சி முனம்பம் துறைமுகத்தில் இருந்து ஏழு மீனவர்களுடன் லட்சத்தீவு பகுதியான அகத்தி தீவு பகுதியில் மீன் பிடிக்க செல்லும் போது, கொச்சியில் இருந்த 30 நாட்டிக்கல் தொலைவில் வைத்து விசை படகில் பழுது ஏற்பட்டு படகு நீரில் மூழ்க துவங்கியது.

இந்த நிலையில், ஏழு மீனவர்களும் அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மற்றொரு விசை படகில் ஏறி
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், விசை படகு நீரில் மூழ்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

https://vimeo.com/795185269
  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 471

    0

    0