திருப்பதி கோவிலில் நடிகர் பிரபுதேவா தரிசனம்.. குடும்பத்துடன் வழிபாடு.. செல்பி எடுக்க கூடிய கூட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 January 2024, 6:41 pm

திருப்பதி கோவிலில் நடிகர் பிரபுதேவா தரிசனம்.. குடும்பத்துடன் வழிபாடு.. செல்பி எடுக்க கூடிய கூட்டம்!!

திருப்பதி கோவிலில் இன்று விஐபி பிரேக் தரிசனம் மூலம் நடிகர் பிரபுதேவா அவரது தந்தை சுந்தர மாஸ்டர் மற்றும் குடும்பத்தார் ஆகியோர் ஏழுமலையானை வழிபட்டனர்.

சாமி கும்பிடுவதற்காக திருப்பதி மலைக்கு வந்த அவர்கள் விஐபி பிரேக் தரிசனம் மூலம் கோவிலுக்கு சென்று ஏழுமலையானை கும்பிட்டனர்.

தொடர்ந்து அவர்கள் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான அர்ச்சர்களிடம் வேத ஆசி, தீர்த்த பிரசாதம் ஆகியவற்றை பெற்று கொண்டனர்.

கோவிலில் இருந்து வெளியில் வந்த பிரபுதேவா உடன் தேவஸ்தான ஊழியர்கள் ரசிகர்கள் ஆகியோர் போட்டி போட்டு செல்பி எடுத்துக் கொண்டனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!