செல்பி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை பறிக்க முயன்ற நடிகர் ராணா : கோபத்தில் செய்த செய்கை.. வைரலாகும் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan15 September 2022, 2:12 pm
திரைப்பட நடிகர் ராணா இன்று காலை குடும்பத்துடன் விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார்.
சாமி தரிசனத்திற்காக நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்த அவர் இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் கோவிலுக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டார்.
சாமி தரிசனத்திற்கு பின் அவருக்கு கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து தேஸ்தான அர்ச்சகர்கள் அவருக்கு வேத ஆசி வழங்கினர்.
பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகர் ராணாவை பார்த்த ரசிகர் ஒருவர் தனது செல்போனின் செல்பி எடுக்க முயன்றார். உடனே செல்போனை அழுத்து பிடித்த ராணா, தர மறுத்தார். பின்னர் ரசிகர் மன்னிப்பு கேட்ட பின் சிரித்துக்கொண்டே செல்போனை தந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.