நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல… 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான அதிர்ச்சி தகவல் !!!

Author: Babu Lakshmanan
26 December 2022, 6:23 pm

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானார். இது அவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக அமைந்தது.

Sushant_Singh_Rajput_Updatenews360

இந்த சூழலில், கடந்த 2020 ஜூன் 14ம் தேதி அவரது வீட்டில் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் சந்தேகம் தெரிவித்த நிலையில், அது பற்றி போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் இறுதியில் அது தற்கொலை என தெரிவித்தனர்.

இந்த நிலையில், சுஷாந்த் சிங்கின் உடலை ப்ரேதே பரிசோதனை செய்த ரூப்குமார் என்ற ஒரு ஊழியர் தற்போது அளித்திருக்கும் ஒரு பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

sushant_singh_rajput_updatenews360

அவர் கூறியதாவது :- சுஷாந்த் சிங் இறந்தபோது, ​​5 உடல்கள் மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டன. அதில் ஒன்று விஐபி சடலம் என்றனர். பிரேத பரிசோதனைக்கு சென்றபோது தான் அது சுஷாந்த் சிங்கின் உடல் என்பது தெரிய வந்தது. அவரது உடலில் பல அடையாளங்கள் மற்றும் கழுத்தில் இரண்டு முதல் மூன்று இடங்களில் காயங்கள் இருந்தன.

உடற்கூராய்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும், ஆனால் உயர் அதிகாரிகள் புகைப்படங்கள் மட்டும் எடுக்கச் சொன்னார்கள். அதனால் நாங்களும் அப்படியே செய்தோம். சுஷாந்தின் உடலை பார்த்ததும், இது தற்கொலை அல்ல, கொலை என்று என்னுடைய சீனியர்களிடம் சொன்னேன். ஆனால், அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் போட்டோ மட்டும் எடு என சொன்னார்கள். பின்னர் உடலை போலீஸிடம் ஒப்படைத்தோம்” என அவர் கூறினார்.

சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலை என்று அறிவிக்கப்பட்டு, இது தொடர்பாக விசாரணை ஒருபுறம் நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது அது கொலை என வெளியாகியிருக்கும் தகவல் பாலிவுட்டில் மட்டுமல்லாது, இந்திய அளவில் பெரும் சர்ச்சையையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒருவேளை அந்த ஊழியர் சுஷாந்தை கொன்றது யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற விவாதம் மீண்டும் எழத் தொடங்கியுள்ளது.

  • Kumbh Mela Monalisa Was she sexually harassed by the arrested director கதறி அழுத கும்பமேளா மோனாலிசா : கைதான இயக்குநரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டாரா?