அசுரன் பட நடிகை குறித்து இன்ஸ்டாவில் அவதூறு பதிவு… குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற பிரபல இயக்குநரை கைது செய்தது போலீஸ்!!

Author: Babu Lakshmanan
5 May 2022, 10:22 pm

கேரளா முன்னணி நடிகை குறித்து சமூகவலைத்தலங்களில் அவதூறு பரப்பியதாக பிரபல இயக்குநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரளாவில் பிரபல நடிகரான திலிப் ன் முன்னாள் மனைவியும், தமிழில் அசுரன் உட்பட தமிழ், மலையாள பாடங்களின் முன்னணி நடிகையுமான மஞ்சுவாரியர் குறித்து பிரபல இயக்குநரும், வழக்கறிஞருமான சணல்குமார் சசிதரன் என்பவர் அண்மையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார்.

அதில், மஞ்சுவாரியர் உயிருக்கு ஆபத்து எனவும், சிலர் பிடியில் சிக்கி இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து மஞ்சுவாரியர் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்து வந்தார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், மஞ்சுவாரியர் தன்னை மர்ம நபர் ஒருவர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாக போலீசாரிடம் புகார் அளித்தார்.

இந்த நிலையில், கேரள மாநிலம் பாறசாலையில் வைத்து எர்ணாகுளம் சைபர் கிரைம் போலீசார் சணல் குமாரை கைது செய்தனர். தமிழக கேரள எல்லையில் உள்ள பாறசாலை மகாதேவர் கோவிலில் குடும்படுத்துடன் தரிசனம் செய்யும் போது, போலீசார் கைது செய்து எர்ணாகுளம் அழைத்து சென்றனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?