8 வருட அரசியல் வாழ்க்கை… காத்திருப்புக்கு பலன் : அமைச்சரவை பட்டியலில் நடிகை ரோஜா பெயர்.. ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2022, 6:22 pm

ஆந்திரா : தொடர்ச்சியாக 2 முறை எம்எல்ஏவாக பதவியேற்ற நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானதால் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று இரவு வெளியிடப்பட இருக்கும் ஆந்திர அமைச்சரவை பட்டியலில் நகரி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் நடிகை ரோஜா பெயரும் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

எனவே நகரியில் அவருடைய வீட்டின் முன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், அவருடைய ஆதரவாளர்கள் ஆகியோர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இரண்டரை ஆண்டு காலத்திற்கு முன் ஆந்திர முதல்வராக பொறுப்பேற்ற முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தன்னுடைய அமைச்சரவையில் 24 அமைச்சர்களை நியமித்தார். அப்போது இரண்டரை ஆண்டுகளுக்கு பின் மந்திரிசபை மாற்றி அமைக்கப்படும்.

நடிகை ரோஜா பதவி பறிப்பு.. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி..! | nagari  mla roja Factories Infrastructure Board Chairman sacked... CMr Jagan Mohan  Reddy

மாற்றி அமைக்கப்படும் மந்திரிசபையில் சிறப்பாக பணியாற்றிய அமைச்சர்களுக்கு மீண்டும் இடம் வழங்கப்படும் என்று கூறினார்.

அதனடிப்படையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வேண்டுகோளுக்கு ஏற்ப கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆந்திர அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

mla roja: గన్ వచ్చే లోపు జగన్ అన్న వస్తాడు.. బాహుబలి సీన్ ను వివరించిన  ఎమ్మెల్యే రోజా

இந்நிலையில் புதிய அமைச்சர்கள் பட்டியல் இன்று இரவு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. புதிய அமைச்சர்கள் பட்டியலில் நகரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆன முன்னாள் நடிகை ரோஜா பெயரும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனவே நகரியில் உள்ள அவரது வீட்டின் முன் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், ரோஜா ஆதரவாளர்கள் ஆகியோர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப் படுத்திக் கொண்டுள்ளனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1780

    0

    0